/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க சவுமியா புது பிரசாரம்
/
வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க சவுமியா புது பிரசாரம்
வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க சவுமியா புது பிரசாரம்
வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க சவுமியா புது பிரசாரம்
ADDED : மார் 31, 2024 03:05 AM
சென்னை: தர்மபுரி தொகுதியில், பா.ம.க., சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.
தனக்கு பா.ம.க., ஓட்டு வங்கி மட்டுமின்றி, தனிப்பட்ட செல்வாக்கும் கைகொடுக்கும் என்று, கட்சியினரிடம் சவுமியா கூறி வந்தார். ஆனால், கிராமப் பகுதிகளில் அவரை பலருக்கு தெரியவில்லை.
சமீபத்தில், ஏற்றுமதி ஆலைக்கு சென்ற சவுமியா, அங்கிருந்த பெண்களிடம் உரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது:
என்னை பற்றி தெரியுமா என்று கேட்க, பலர் முழித்துள்ளனர்.
உடனே சவுமியா, 'என்னை பற்றி யு டியூப், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் உரிமைக்காக பேசிய வீடியோக்கள் நிறைய உள்ளன. சாமி கும்பிடுவதை பற்றி சொல்லி இருக்கிறேன்.
'எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிந்து விட்டது; பேத்திகள் உள்ளனர். ஒரு அம்மாவாக, பெண்கள் பிரச்னை எனக்கு தெரியும். என்னை, ஓட்டு போட்டு ஜெயிக்க வையுங்கள்.
இவ்வாறு கூறினார்.

