/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சரக அளவிலான கோகோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி முதலிடம்
/
சரக அளவிலான கோகோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி முதலிடம்
சரக அளவிலான கோகோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி முதலிடம்
சரக அளவிலான கோகோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி முதலிடம்
ADDED : ஆக 09, 2024 03:13 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடந்து வரும் குழு விளையாட்டு போட்டிகளில், கோகோ விளை-யாட்டில் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் முத-லிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட கோகோ போட்டி, வயது வரம்பு அடிப்படையில், ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சீனியர் பெண்களுக்கான பிரிவில் முதலிடமும், ஆண்களுக்கான ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுக-ளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரி-யர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், திவ்யா ஆகியோரை, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.