/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்போர் மீது கடும் நடவடிக்கை
/
விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்போர் மீது கடும் நடவடிக்கை
விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்போர் மீது கடும் நடவடிக்கை
விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்போர் மீது கடும் நடவடிக்கை
ADDED : மே 26, 2024 07:39 AM
தர்மபுரி : விதை விற்பனை உரிமம் பெறாமல், விதைச்சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் பழச்செடிகள், தென்னகன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வோர் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய விதை விற்பனை உரிமம், 312 நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் பெற்றுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடிக்கு, குழித்தட்டு நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளை நடவு செய்கிறார்கள்.
இதில், தனியார் நாற்றுப்பண்ணையாளர்கள் தமிழ்நாட்டில் இதர மாவட்ட விவசாயிகளுக்கும் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகளை விற்பனை செய்கின்றனர். ஆகையால், விதைச்சட்டம், 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 ஆகிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, தவறு செய்வோர் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதை, தமிழக அரசின் விதைச்சான்று துறையில் செயல்படும், விதை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள், வணிக முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அனைத்து நாற்று பண்ணை உரிமையாளர்களும், உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல், மேற்கண்ட நாற்றுகள் விற்பனை செய்வோர் மீது, நீதிமன்ற வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அதில்
தெரிவித்துள்ளார்.