/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும ்பஸ்களால் அவதி
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும ்பஸ்களால் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும ்பஸ்களால் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும ்பஸ்களால் அவதி
ADDED : ஜூன் 09, 2024 04:05 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பஸ் ஸ்டாண்டாக மாற்றி அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.
இதற்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டு தற்போது, புதிய கட்டங்கள் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் காரணமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம் முதல், டி.எஸ்.பி., அலுவலகம் வரை உள்ள சாலை பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், அச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்களை முறையாக நிறுத்த, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.