/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு
/
சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு
ADDED : ஆக 22, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு
தர்மபுரி, தர்மபுரியில், பாலக்கோடு நெடுஞ்சாலையில், தர்மபுரி அடுத்த, பழைய தர்மபுரியில் இருந்து, முத்துகவுண்டன் கொட்டாய் ரயில்வே பாலம் வரை, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, குறிப்பிட்ட, 3 கி.மீ., தொலைவில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள, புளிய மரங்கள் உட்பட, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான, மரங்கள் கணக்கெடுக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று நடந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ., முருகன், வனத்துறை அலுவலர் ரேவதி, சாலை பணியாளர்கள் மரங்கள் கணக்கெடுப்பு மற்றும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.