/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரிவர்ஸ் கியர் போட முடியாமல் மல்லுகட்டிய பிரேக் இன்ஸ்பெக்டர்
/
ரிவர்ஸ் கியர் போட முடியாமல் மல்லுகட்டிய பிரேக் இன்ஸ்பெக்டர்
ரிவர்ஸ் கியர் போட முடியாமல் மல்லுகட்டிய பிரேக் இன்ஸ்பெக்டர்
ரிவர்ஸ் கியர் போட முடியாமல் மல்லுகட்டிய பிரேக் இன்ஸ்பெக்டர்
ADDED : மே 25, 2024 02:19 AM
தர்மபுரி: தமிழகத்தில் ஜூன், 6ல், பள்ளிகள் திறக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்ய, வட்டார போக்கு
வரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவிட்டதின் பேரில், பாலக்கோடு பிரேக் இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி தனியார் கல்லுாரி வளாகத்தில், வாகனங்களை தணிக்கை செய்தார்.
முன்னதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம், 'சாலையில் விபத்தின்றி வாகனங்களை இயக்குவது, மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்து செல்வது' குறித்து அறிவுரை வழங்கினார்.
வாகன தணிக்கையில் பாலக்கோடு, காரிமங்கலம் தாலுக்காவை சேர்ந்த, 38 கல்வி நிறுவனங்களில் இயக்கப்படும், 304 வேன் மற்றும் பஸ்களில், 262 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 12 வாகனங்களில் வேககட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, பிளாட்பாரம், ஏர் ஹாரன் உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு வர உத்தரவிட்டார்.
பிரேக் இன்ஸ்பெக்டர் வெங்கடுசாமி, ஒரு தனியார் பள்ளி வாகனத்தை இயக்கும்போது, ரிவர்ஸ் கியர் போட முடியாமல் மல்லுகட்டினார். பின்னர் ஓட்டுனர் உதவியுடன் இருவரும் சேர்ந்து, ராடினை இழுத்து, ரிவர்ஸ் கியர் போட்டது மற்ற பள்ளி ஓட்டுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற பழுதுள்ள வாகனம், தணிக்கைக்கு வராத, 42 வாகனங்களை உரிய முறையில் பழுது பார்த்து, ஜூன், 1க்குள் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

