/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் வருகையை ஒட்டி புதுப்பொலிவு பெறும் பள்ளி
/
முதல்வர் வருகையை ஒட்டி புதுப்பொலிவு பெறும் பள்ளி
ADDED : ஜூலை 07, 2024 05:46 AM
தர்மபுரி : ஊரக பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க, ஜூலை, 11ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிறார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 672 மாணவ, மாண-விகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மைதானத்தில் ஜூலை, 11 அன்று ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அதற்காக விழா மேடை அமைக்கும் பணிகள், நலத்திட்ட உதவி-களுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவை நடந்து வருகிறது.
பாளையம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் பல இடங்களில் சேதம் அடைந்திருந்தது. முதல்வர் வருகைக்காக சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பள்ளி வளாகம் புதுப்பொலிவுடன் மாறி வருகிறது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.