/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவிலில் பணியாற்றிய பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்
/
கோவிலில் பணியாற்றிய பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்
கோவிலில் பணியாற்றிய பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்
கோவிலில் பணியாற்றிய பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்
ADDED : ஆக 18, 2024 03:38 AM
தர்மபுரி: துர்க்கை அம்மன் சன்னதியில், பணியில் இருந்த பெண்ணை, இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி விட்டு, கருவறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி, டவுன் குமாரசாமிபேட்டையில், ஹிந்து சமய அறநி-லையத் துறைக்கு சொந்தமான, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் குமாரசாமிபேட்டையை சேர்ந்த ராஜேஸ்-வரி, 55, என்பவர் துாய்மை பணி செய்து கொண்டிருந்தார். காலை, 10:00 மணிக்கு காக்கிச்சட்டை அணிந்து, பெரிய கத்தி-யுடன் வந்த இளைஞர் ஒருவர், அவரை கத்தியால் தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட, 13 இடங்களில் வெட்டினார். இதில், ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வந்தபோது, அந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி அனைவரையும் விரட்டி விட்டு, கோவில் கருவறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரியை அங்கிருந்-தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவிலுக்கு வந்த, தர்மபுரி டவுன் போலீசார், கோவில் கருவறை-யிலிருந்த இளைஞரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை சேர்ந்த சித்தி-விக்னேஷ், 25 என்பதும், போலீஸ் உடையணிந்து, மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

