/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதிய தம்பதியை கட்டிப்போட்டு நகை பறித்த கொள்ளையர்கள்
/
முதிய தம்பதியை கட்டிப்போட்டு நகை பறித்த கொள்ளையர்கள்
முதிய தம்பதியை கட்டிப்போட்டு நகை பறித்த கொள்ளையர்கள்
முதிய தம்பதியை கட்டிப்போட்டு நகை பறித்த கொள்ளையர்கள்
ADDED : ஆக 15, 2024 01:13 AM
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி, 64, விவசாயி. இவர் மனைவி சித்ரா, 56, தோட்டத்து வீட்டில் வசிக்கின்றனர். இவர்களின் இரண்டு மகன்களும் வெளியூரில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தங்கமணி, அவரது சித்தப்பா ஆதிமூலம், 70, சித்ரா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இரவில் தங்கமணி வெளியே வந்தபோது, முகமூடி அணிந்த நபர், அவரை கத்தியால் கிழித்தார். தங்கமணி கூச்சலைக் கேட்டு மனைவி சித்ரா, சித்தப்பா ஆதிமூலம் வெளியே வந்தனர். முகமூடி அணிந்து வந்த மேலும் இரண்டு பேர், அந்த மூவரின் கைகளை துணியால் கட்டினர்.
பின், கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 சவரன் நகை, 30,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் அந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டார். கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.