/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் சுற்றித்திரியும் முதலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்
/
ஒகேனக்கல்லில் சுற்றித்திரியும் முதலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்
ஒகேனக்கல்லில் சுற்றித்திரியும் முதலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்
ஒகேனக்கல்லில் சுற்றித்திரியும் முதலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : மே 05, 2024 03:29 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடங்களில், சுற்றித்திரியும் முதலைகளை -பிடிக்க, வனத்
துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்,
ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம், பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி ஆற்றுப்
பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட
முதலைகள் உள்ளன. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக, தண்ணீர் இல்லாமல் வறண்டு வெறும் பாறைகள் மட்டுமே தென்படுகின்றன. காவிரி ஆற்றில் பார்வை
யிடும் ஐந்தருவி, முதலைப்பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் ஆகிய பகுதிகளில் முதலைகள் சுற்றித்திரிவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் முன், முதலை ஒன்று வந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், இங்குள்ள முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சுற்றுலா பயணிகள் சென்று சுற்றி பார்க்கும் இடங்களில், அச்சுறுத்தும் வகையில் உள்ள முதலைகளை வனத்
துறையினர் பிடித்து, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும்.