ADDED : ஜூன் 01, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்;அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை வருவாய் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம், அரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இதில் வரும், 4ல் தர்மபுரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது, வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதும், அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, பெட்டிகளில் அடுக்கப்பட வேண்டும். பின், போலீஸ் பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும் வரை பணியில் இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை, அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் வழங்கினார்.