/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து
/
தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஆக 06, 2024 02:22 AM
தொப்பூர், தெலுங்கானா மாநிலம், எர்ரஹள்ளியை சேர்ந்தவர் ஜாகிர்பாஷா, 47; இவர் நேற்று ஆந்திர மாநிலத்திலிருந்து, பொள்ளாச்சிக்கு மக்காசோள மாவு மூட்டை லோடு லாரியில் ஏற்றி கொண்டு வந்தார்.
லாரி தர்மபுரி மாவட்டம், பெங்களுரூ - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே, நேற்று மாலை, 6:30 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் மற்றும் உடன் வந்த கிளீனர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த, சாலை பராமரிப்பு குழுவினர் மற்றும் தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். விபத்தால் அப்பகுதுயில், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.