/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது
/
வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது
ADDED : பிப் 28, 2025 01:30 AM
வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது
அரூர்:அரூர் அடுத்த பச்சனாம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம், 54. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பாலம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 37, என்பவரும் கடந்த, 25ல், வேப்பம்பட்டியில் உள்ள விநாயகா ரைஸ்மில் அருகில் கட்டுவலை வைத்து கீரிப்பிள்ளையை பிடித்தனர். அங்கு வந்த தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து, தீர்த்தமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்து, அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி, இருவரும் அரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கீரிப்பிள்ளை பாதுகாப்பாக, தீர்த்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது.