/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்
/
விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்
ADDED : ஆக 09, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே டி.என்.,பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 34. இவர் கடந்த, 2017ல், அப்பகுதியில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் பலியானார்.
இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். இந்த வழக்கு கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணை அதிகாரியான, அப்போதைய பங்களாப்புதுார் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சாட்சி விசார-ணைக்கு நேற்று ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி விஜய் அழ-கிரி, இன்ஸ்பெக்டர் மீது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சேலம் மாவட்டம், பள்ளப்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தற்போது பணிபுரிகிறார்.