தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


ADDED : அக் 06, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்ப-ணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தண்ணீர் ஆர்ப்

பரித்து கொட்டியது.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்-கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்-டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிரா-மங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்

பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்-ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று, 687 கன அடி திறக்கப்பட்ட நீரால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்-ணையாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்-ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us