UPDATED : அக் 06, 2026 07:36 AM
ADDED : அக் 06, 2026 06:12 AM

அரூர்; அரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்-டனர். தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், அரூர் நகராட்சி அலுவலகம் முன், நடந்த போராட்-டத்தில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியா-ளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், நிரந்தர தொழிலாளர்களின் மருத்துவ விடுப்பு, சரண் விடுப்பை பணமாக்குதலை காலதாமத-மின்றி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்-களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழி-லாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பணிக்கு தேவையான உபகரணங்-களை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்-பப்பட்டன. * துாய்மை பணி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலா-ளர்கள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
