ADDED : செப் 01, 2024 03:23 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 22,000 கன அடியாக அதி-கரித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், கர்நாடகா அணை-களில் வினாடிக்கு, 10,576 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கபினியிலிருந்து நேற்று, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணை-யிலிருந்து, 16,523 கன அடி என, 21,523 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 22,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் ஐந்த-ருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.