/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி
/
காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி
ADDED : மே 28, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரியில், நேற்று காலை, 6:00 மணி முதல் பலத்த காற்று வீச துவங்கியது.
இதில், நெல், வாழை உள்ளிட்டவை வயலில் சாய்ந்தன. தர்மபுரி எஸ்.வி.ரோடு., பகுதியியில், அரசு நிலத்தில் இருந்த அலங்கார கொன்றை மரம், கட்டட சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு சாலை மற்றும் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால், காலை, 7:00 மணி முதல், எஸ்.வி.ரோடு, காந்தி நகர், தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டனர். பின், பகல், 1:00 மணிக்கு மேல் வந்த, மின் வினியோகத்தால் நிம்மதியடைந்தனர்.