/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
/
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
ADDED : மே 26, 2024 07:41 AM
அரூர் :அரூர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி, பெண்கள் மனுக்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குமாரம்பட்டியில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், கடந்த வாரம் அங்குள்ள நிலத்திற்கு வீட்டுமனை வழங்கக்கோரி கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினரிடம், இது அரசு புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறினர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு, குமாரம்பட்டியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி, மனுக்களுடன் அரூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடமிருந்து அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, 11:40 மணிக்கு பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.