/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேளாண் துறை திட்டங்களில் பயன்பெற 'உழவர் செயலி'யில் முன்பதிவு செய்யலாம்
/
வேளாண் துறை திட்டங்களில் பயன்பெற 'உழவர் செயலி'யில் முன்பதிவு செய்யலாம்
வேளாண் துறை திட்டங்களில் பயன்பெற 'உழவர் செயலி'யில் முன்பதிவு செய்யலாம்
வேளாண் துறை திட்டங்களில் பயன்பெற 'உழவர் செயலி'யில் முன்பதிவு செய்யலாம்
ADDED : மே 28, 2024 07:46 AM
தர்மபுரி: தர்மபுரி வட்டாரத்தில், பரவலாக கோடை மழை பெய்தது. இதையடுத்து, விளை நிலங்களில், கோடை உழவு உள்ளிட்ட சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
இது குறித்து, தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்ததாவது: நடப்பாண்டில் வேளாண் துறை மூலம், முதல்வரின், மண்ணுயிர் காப்போம், சிறுதானிய இயக்கம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் விதை கிராம திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், சிறு தானிய சாகுபடியை ஊக்குவிக்க உழவு மானியம், ஹெக்டேருக்கு, 2,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியில் கே.நடுஹள்ளி, கோணங்கிநாயக்கனஹள்ளி, ஆண்டிஹள்ளி, செம்மாண்டகுப்பம், வே.முத்தம்பட்டி ஆகிய பஞ்.,கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவர் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு துணை வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்.,களில் அனைத்து திட்டத்திலும், 80 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.