ADDED : ஆக 29, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, ஆக. 29-
தர்மபுரி, மாவட்ட இளைஞர், காங்., சார்பில், தர்மபுரி மருத்துவ வணிகர் சங்க கட்டடத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தீபன்குமார் முன்னிலை வைத்தார். மாநில தலைவர் லெனின்
பிரசாத் பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, மா, புளி, புங்கன், வேம்பு உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முபாரக், விவசாய பிரிவு தலைவர் மணி, மனித உரிமை துறை சதீஷ்குமார், மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.