/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு
ADDED : ஏப் 16, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு
தர்மபுரி:தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 28ல் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில், 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 பேர் பொதுத்தேர்வு எழுதயிருந்தனர். இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படை குழுவினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், தேர்வு பணியில், 20,250 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், நேற்று நடந்த தேர்வில், 136 மாணவியர், 261 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதில், நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, மாணவியர் தெரிவித்தனர்.

