/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி100 நாள் தொழிலாளர் மனு
/
கோரிக்கைகளை வலியுறுத்தி100 நாள் தொழிலாளர் மனு
ADDED : ஏப் 23, 2025 01:22 AM
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின், ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமையில், 100 நாள் தொழிலாளர்கள் நேற்று, நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பஞ்., களை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 100 நாள் பணி வழங்க வேண்டும். ஏற்கனவே, பணி செய்த பெண்களுக்கு நிலுவையிலுள்ள கூலியை வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மனு அளித்தனர்.
விடுதி உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர், அங்குள்ள தனியார் தங்கும் விடுதி மற்றும் காட்டேஜிகளில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, ஒகேனக்கல்லை சுற்றி பார்ப்பது வழக்கம். பயணிகள் விடுதியில் தங்கும் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பது, மதுபோதையில் காவிரியாற்றில் மூழ்கி இறப்பதை தவிர்க்க, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி விடுதி உரிமையாளர்களிடம் பேசியதாவது;
விடுதியில் தங்கும் அனைவரிடமும் ஆதார் நகல் வாங்க வேண்டும். ஒகேனக்கல் காவிரியாற்றை பற்றி நன்கு தெரிவிக்க வேண்டும். ஆழமான மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்து, சுற்றுலா பயணிகளுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆலம்பாடி பகுதிக்கு போக அனுமதிக்க கூடாது, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடைபிடிக்காத, தங்கும் விடுதிகள் மற்றும் காட்டெஜிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

