/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
/
100 நாள் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : மே 20, 2024 02:01 AM
தர்மபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு, வேலையில்லா கால நிவாரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் தெரிவித்ததாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு, கடந்த, 3 மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. இதில், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் சட்டபடி வழங்க வேண்டும். கடந்த, 2023 - -2024 நிதி ஆண்டின், கடைசி மாதமான மார்ச், மாதம் மற்றும் தற்போது நடந்து வரும், 2024 -- 2025 ல் நிதியாண்டில் ஏப்., மே ஆகிய, 3 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை வழங்கப்படவில்லை.
மேலும், தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால், கிராமப்புற தொழிலாளர்களுக்கு எந்த விதமான வேலையின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 100 நாள் வேலை திட்டத்தில், அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்கும் வரை, வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

