/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் 108.5 டிகிரி வெயில்
/
தர்மபுரியில் 108.5 டிகிரி வெயில்
ADDED : மே 03, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால், மாவட்டத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நீரின்றி வறண்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக, 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசியது. நேற்று முதன்தினம், 107 டிகிரியாகவும், நேற்று, 42.5 டிகிரி செல்ஷியல் அதாவது, 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.