ADDED : அக் 31, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்:  தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் சரிதா, 45. இவர், போளையம்பள்ளி  கருணாநிதி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 28ல் காலை, 11:45 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, தர்மபுரியிலுள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மாலை உறவினர் தம்பிதுரை என்பவர் சரிதாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
சரிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் லாக் மற்றும் படுக்கை அறையில் இருந்த, சேப்டி லாக்கரை உடைத்து அதிலிருந்த, செயின், வளையல், தோடு உள்ளிட்ட, 12 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

