/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
/
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
ADDED : நவ 20, 2025 02:52 AM
சேலம், சென்னையை சேர்ந்த, டிரைவர் மூவேந்தர். இவர், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவைக்கு, தனியார் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் வந்துகொண்டிருந்தார்.
அங்கு, 'பேரிகார்டுகள்' வைக்கப்பட்டு, வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டிருந்தன. ஆனால் மூவேந்தர் நேராக சென்று பேரிகார்டில் மோத, கட்டுப்பாட்டை இழந்த பஸ், தொடர்ந்து சென்டர் மீடியனில் மோதி, எதிரே உள்ள சாலையில் சாய்ந்தது. பஸ் பயணியர், இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர்.
அதில் மூவேந்தர், சத்தியமங்கலத்தை சேர்ந்த விஷால், 30, கோவையை சேர்ந்த ஆனந்த், சுபாஷ், ஹரிநந்தன், இரு குழந்தைகள் உள்பட, 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், பஸ்சை அப்புறப்படுத்தினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதனிடையே காயம் அடைந்தவர்களை, மருத்துவமனையில் சந்தித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அதிகாரிகள், ஆறுதல் தெரிவித்தனர்.

