/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கரூர் நீதிமன்றத்தில் த.வெ.க., நிர்வாகிகள் ஆஜர்
/
கரூர் நீதிமன்றத்தில் த.வெ.க., நிர்வாகிகள் ஆஜர்
ADDED : நவ 20, 2025 02:52 AM
கரூர், கரூர் அருகே நடந்த, த.வெ.க., கூட்டத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கில், முன்ஜாமின் பெற்ற ஒன்பது த.வெ.க.,வினர், கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், விஜய் பங்கேற்ற த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்களை தாக்கியதாக, த.வெ.க.,வினர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்களை தாக்கிய வழக்கில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கவுதம், தனசேகர், அன்புமணி, செந்தில் குமார், சுப்பிரமணி ஆகிய ஒன்பது பேர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த, 7ல் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நாள்தோறும் கையழுத்திட வேண்டும் என்ற, நிபந்தனையுடன் முன் ஜாமின் பெற்றனர்.
இதற்கிடையில் நேற்று ஒன்பது பேரும், கரூர் ஜே. எம்.,--1 நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன் ஆஜராகி, ஜாமின் தொடர்பான பத்திரங்களை தாக்கல் செய்து, முறைப்படி ஜாமின் பெற்றனர்.

