sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

/

தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு


ADDED : ஜூலை 12, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட, 15 திட்டங்களை, தர்மபுரி அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில், ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது, தர்மபுரி மாவட்டத்திற்கு, 15 அறிவிப்புகளை மேடையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் விபரம்: 51 கோடி ரூபாயில், அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள், தர்மபுரி - வெண்ணாம்பட்டி சாலையில், 38 கோடி ரூபாயில் புதிய ரயில்வே மேம்பாலம், அரூர் பேரூராட்சியில் மோப்பிரிபட்டி, தொட்டம்பட்டி ஊர்களை இணைத்து, 'அரூர் நகராட்சி'யாக தரம் உயர்த்தல், பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள், 5.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு, சிட்லிங், அரசநத்தம் பகுதியில் ராகி, சாமை, வரகை மதிப்பு கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச்செயலாக்க மையம், தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். மேலும், பாளையம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், சேதமான, 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

தர்மபுரி ஒன்றியத்தில் பெரியபட்டி, வெள்ளாளப்பட்டி பஞ்.,ல், 2.54 கோடி ரூபாயில், அரூர் ஒன்றியம் சிட்லிங், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி பஞ்.,களில், 3.82 கோடி ரூபாயில் என மொத்தம், 6.36 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய கூடங்கள், மொரப்பூர், அரூரிலுள்ள குழந்தைகள் மையங்களுக்கு தலா, 16.69 லட்சம் ரூபாய் என, 1.17 கோடி ரூபாயில், 7 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

கம்பைநல்லுார் பேரூராட்சி மக்களுக்காக, இருமத்துார் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையம் அருகே, திறந்தவெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய், பஸ் ஸ்டாண்ட் அருகே, கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ., நீளத்திற்கு குழாய் அமைத்து, 1.10 கோடி ரூபாயில், குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அரூர் ஒன்றியம், பறையப்பட்டி புதுார் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்ச்சாலை மற்றும் வீரப்பநாயக்கன்பட்டி தார்ச்சாலை பணிகள் மற்றும் மொரப்பூர் ஒன்றியம், போளையம்பள்ளி முதல், கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச்சாலை ஆகியவை, 60 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்படும்.

கௌாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே மற்றும் சிட்லிங் பஞ்., நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, காட்டாற்று ஓடையின் குறுக்கே தலா, 50 லட்சம் ரூபாயில் பாலம் கட்டப்படும்.

அரூர், பறையப்பட்டி புதுார் பஞ்., ஜி.கே.ரோடு கிராமத்தில், 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இருமத்துார், போளையம்பள்ளி, மொரப்பூர் பஞ்.,களில், 3 இடங்களில், 60,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும்.

பாளையம்புதுார் பஞ்., கோம்பை, மூலக்கோம்பை, ராஜிவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில், 50 லட்சம் ரூபாயில் சாலை, தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர் தெருவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைத்தல் என, 90 லட்சம் ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us