/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன், ரூ.6.50 லட்சம் திருட்டு
/
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன், ரூ.6.50 லட்சம் திருட்டு
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன், ரூ.6.50 லட்சம் திருட்டு
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன், ரூ.6.50 லட்சம் திருட்டு
ADDED : நவ 28, 2025 02:45 AM
மோகனுார்,மளிகை கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 15 பவுன் நகை, 6.50 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் டவுன் பஞ்., பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 65. இவர், மோகனுார்-வளையப்பட்டி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு மனைவி சரஸ்வதியுடன், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமியை தரிசனம் செய்தவர் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது, கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலுக்குள் லாக்கரில் வைத்திருந்த, 6.50 லட்சம் ரூபாய், கப்போர்டில் வைத்திருந்த, 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து, மோகனுார் போலீசாருக்கு கிருஷ்ணகுமார் தகவல் தெரிவித்தார். ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த, 22ல், மோகனுார் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் சரஸ்வதி, 62, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்ககாசு, மோதிரம், தோடு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
மோகனுார் பகுதியில், தொடர்ந்து திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி
உள்ளது.

