/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
150 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
150 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 01, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
150 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
சேலம்:சேலம், சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் குபேந்திரன் தலைமையில், தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டவர்கள், அ.தி.மு.க.,வில் ஐக்கியமாயினர்.
இவர்களை பொதுச்செயலர் இ.பி.எஸ்., துண்டு அணிவித்து வரவேற்றார்.அமைப்பு செயலர் சிங்காரம், எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன், மாநகர பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

