/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்தால் வீணான 1.50 லட்சம் முட்டை
/
விபத்தால் வீணான 1.50 லட்சம் முட்டை
ADDED : ஜூலை 30, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, நாமக்கல் மாவட்டத்தில், 1.50 லட்சம் கோழி முட்டைகள் ஏற்றப்பட்ட லாரி, சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. மல்லுார் அடுத்த தாசநாயக்கன்பட்டி பாலம் அருகே, மாலை 6:00 மணிக்கு வந்தபோது, முட்டை லோடு லாரியின் பின்புறம், மற்றொரு லாரி மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த முட்டை லாரி, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் முட்டைகள் உடைந்து வீணாகின. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருப்பினும், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன. திருநெல்வேலியை சேர்ந்த முட்டை லாரி டிரைவர் ராமச்சந்திரன், 55, தப்பினார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

