/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்சில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் நா.த.க., கட்சியினர் 19 பேர் கைது

ADDED : டிச 22, 2025 08:35 AM

அரூர்: அரூரில், அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய, நாம் தமிழர் கட்சியினர், 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள, 'அரசு போக்குவரத்து கழகம்' என்பதற்கு முன், 'தமிழ்நாடு' என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம், நா.த.க., சார்பில், நேற்று தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமையில் நடந்த போராட்டத்தில், அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கரை நா.த.க., ஒட்டினர். இதையடுத்து, ஸ்டிக்கரை கிழித்த அரூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட, 19 பேரை கைது செய்தனர்.