/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் ஓய்வூதியர் தின விழா
/
தர்மபுரியில் ஓய்வூதியர் தின விழா
ADDED : டிச 22, 2025 08:37 AM
தர்மபுரி: மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஓய்வூதியர் தின விழா, தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரவி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில இணை செயலாளர் குப்புசாமி உட்பட பலர் பேசினர்.
இதில், 2004 ஜன.,1 முதல் மத்திய அரசும், 2003 ஏப்., 1 முதல் தமிழக அரசும் ஓய்வூதியத்தை அழித்து, புதிய ஓய்வூதியம் என்ற பெயரில் மாதா மாதம் ஓய்வூதியம் பெறுவதை இல்லாமல் செய்து விட்டனர். மேலும், மத்திய அரசு, 2025 மார்ச், 25 அன்று லோக்சபாவில் நிறைவேற்றியுள்ள ஓய்வூதியர்களை வகைப்படுத்தும், வேலிடேசன் கேஸ் என்ற சட்ட திருத்தத்தின் மூலமும், 8வது சம்பள கமிஷனின் ஓய்வூதிய திருத்தம் செய்ய எவ்வித பரிந்துரை கோராமலும், தவிர்த்து ஓய்வூதியர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதனை, ஓய்வூதியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

