/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
/
மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்
ADDED : அக் 05, 2024 05:58 AM
பவானி : அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்-தவர் செல்வக்குமார், 32; அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் முதல் நிலை காவலர். இரண்டு நாட்களுக்கு முன், அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் செக்போஸ்டில் இரவு பணியிலிருந்தார். அப்போது வாழைத்தார் ஏற்றி சென்ற ஒரு வாகன டிரைவரிடம், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் செல்வக்குமார் அப்-போது குடிபோதையில் இருந்துள்ளார்.
இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலா-னது. இதுகுறித்து பவானி டி.எஸ்.பி., சந்திரசே-கரன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. ஜவஹர், செல்வக்கு-மாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.