ADDED : ஜூலை 23, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, தற்போது தர்மபுரி, தடங்கத்தில் செயல்பட்டு மோட்டார் வாகன விபத்துகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்றம் ஆகியவை, தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள
ஹெரிடேஜ் கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளது.இந்த நீதிமன்றங்கள் நாளை (24ம் தேதி) முதல் புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கும். இதை கருத்தில் கொண்டு, அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.