/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வட மாநில தொழிலாளியிடம் மொபைல் பறித்த 2 பேர் கைது
/
வட மாநில தொழிலாளியிடம் மொபைல் பறித்த 2 பேர் கைது
ADDED : அக் 22, 2025 01:25 AM
அரூர், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராவந்த், 23. இவர், அரூர் சுமைதாங்கிமேடு பகுதியில் உள்ள பொரி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, ராவந்த் பைக்கில் அரூர் - கீரைப்பட்டி சாலையில், பழையபேட்டை பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், ராவந்தை நிறுத்தினர். பின், அவரை மிரட்டி, அவரிடமிருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து, 'சிசிடிவி' கேமரா பதிவை கொண்டு கெளாப்பாறையை சேர்ந்த ஆனந்த், 21, பழையபேட்டை தினேஷ், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.