ADDED : அக் 31, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன் உள்ளிட்ட போலீசார் வடசந்தையூர் அரசு மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புளியமரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற காளிப்பேட்டையை சேர்ந்த சரவணன், 48, வடசந்தையூரை சேர்ந்த குஜ்ரத்அலி, 39 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, லாட்டரி சீட்டு மற்றும் 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

