/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தர்மபுரி கடைகளில் பறிமுதல்
/
2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தர்மபுரி கடைகளில் பறிமுதல்
2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தர்மபுரி கடைகளில் பறிமுதல்
2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தர்மபுரி கடைகளில் பறிமுதல்
UPDATED : ஏப் 16, 2025 12:58 PM
ADDED : ஏப் 16, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தர்மபுரி நகராட்சி பகுதியில் நேற்று ஒரு நாள் நடந்த சோதனையில், 2 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் படி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, அப்துல் முஜீப் தெருவில், நகராட்சி கமிஷ்னர் சேகர் ஆலோசனை படி, நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்பகுதியில் உள்ள, கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 2 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, துப்புரவு அலுவலர், ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணச்சரண் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய, தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் லாவண்யா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

