/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராவல் மண் கடத்தல் 2 வாகனம் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல் 2 வாகனம் பறிமுதல்
ADDED : ஜூலை 17, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் கடந்த, 15 அன்று மதியம், 12:15 மணிக்கு தொப்பூர் வி.ஏ.ஓ., விக்னேஷ் உடன் தொப்பூர் அடுத்த, செட்டிகோப்பை - உம்மிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த, டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 4 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. அதைதொடர்ந்து, மண் எடுத்த இடத்தில் பொக்லைன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இரு வாகனங்களின் ஓட்டுனர்களும் தப்பிச் சென்ற நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர். புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

