/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழைக்கு 2 வீட்டின் சுவர்கள் விழுந்தது
/
மழைக்கு 2 வீட்டின் சுவர்கள் விழுந்தது
ADDED : அக் 26, 2024 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாப்பிரெட்டிபட்டியில், 40 மி.மீ., மழை பதிவானது.
அலமேலுபுரம் கிராமத்தில், செல்வம் மனைவி சிந்தாமணி என்பவரின் கூரை வீட்டின், ஒரு பக்க சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. கடத்துார் அடுத்த மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த அபிராமி என்பவரின் ஓட்டு வீடு மழையில் ஊறியதில், ஒரு பகுதி சுவர்
இடிந்து விழுந்தது.