/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுக்கட்சியினர் 20 பேர்பா.ம.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் 20 பேர்பா.ம.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 18, 2024 01:45 AM
மாற்றுக்கட்சியினர் 20 பேர்பா.ம.க.,வில் ஐக்கியம்
பாலக்கோடு, டிச. 18-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தையில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, பா.ம.க.,வில் இணையும் நிகழ்ச்சி காரிமங்கலம், பா.ம.க., மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் பாடிசெல்வம் முன்னிலை வகித்தார்.
வெள்ளிசந்தை மற்றும் ஊமையன்கொட்டாய் கிராமங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், தர்மபுரி, பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் முன்னிலையில் தங்களை, பா.ம.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து எம்.எல்.ஏ., வரவேற்றார். நிகழ்ச்சியில், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சிவகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.