/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் 20 டன் பூக்கள் விற்பனை
/
தர்மபுரியில் 20 டன் பூக்கள் விற்பனை
ADDED : ஜன 15, 2024 11:22 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் பூக்கள் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதிலும் அதிக லாபம் ஈட்டக்
கூடிய சாமந்தி பூவை அதிகம் பயிரிடுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலகோடு, காரிமங்கலம், கம்பைநல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ மார்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் சாமந்தி பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று, போகி பண்டிகை தொடங்கிய நிலையில், பூ மார்கெட்டில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த சாமந்தி, செண்டு மல்லி பூக்களை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று தர்மபுரி பூ மார்க்கெட்டில், 20 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, ஒரு கிலோ சாமந்திப்பூ, 120 ரூபாய்க்கும், சன்னமல்லி கிலோ, 2,000 ரூபாய், குண்டுமல்லி, 2,000 ரூபாய், கனகாம்பரம், 1,600, ஜாதிமல்லி, 1,200, சம்பங்கி, 140 என விற்பனையானது. இந்த விலையேற்றத்தால், பூ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.