/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் 20,000 கன அடி நீர்வரத்து
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் 20,000 கன அடி நீர்வரத்து
ADDED : ஜூலை 18, 2025 01:57 AM
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு, 20,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டு மழை தொடங்கியதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்
துறையினர் தெரிவித்தனர்.