/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 25 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
/
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 25 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 25 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 25 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
ADDED : ஜூன் 25, 2025 01:47 AM
தர்மபுரி, மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், 25 அலுவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்து, நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டார்.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., ஆறுமுகம், கடத்துார் பி.டி.ஓ., ரவிச்சந்திரன், பென்னாகரம் பி.டி.ஓ., மணிவண்ணன் ஆகியோர், ஊராட்சி உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றனர். பென்னாகரம் ஒன்றிய கமிஷனர் லோகநாதன், பென்னாகரம் கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ.,வாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கடத்துார் ஒன்றிய கமிஷனராக பணியாற்றிய சுருளிநாதன், அங்கேயே கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாப்பிரெட்டிப்பட்டி துணை பி.டி.ஓ., (சத்துணவு) ராமஜெயம், கடத்துார் பி.டி.ஓ.,வாகவும், தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை பி.டி.ஓ., அறிவழகன், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,வாகவும், தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை பி.டி.ஓ., (தணிக்கை) சக்திவேல், பென்னாகரம் பி.டி.ஓ.,வாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு ஊர் நல அலுவலர் என, 3 பேர் துணை பி.டி.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர். மேலும், 17 துணை பி.டி.ஓ.,க்கள் பி.டி.ஓ.,க்களாக பதவி உயர்வில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.