ADDED : ஜன 21, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அதில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட தாட்கோ சார்பில், 5 துாய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும், 5 துாய்மை பணியாளர்களுக்கு துாய்மை பணியாளர் நலவாரியத்தின் சார்பில், 2024-25ம் ஆண்-டுக்கான
கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை-யாக தலா, 10,500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்-டத்தில், டி.ஆர்.ஓ., கவிதா, சப் கலெக்டர் சுப்பிரமணி, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, தாட்கோ மாவட்ட
மேலாளர் வேல்மு-ருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.