தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பிளஸ் 2 பொதுத்தேர்வில் 283 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 283 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 283 மாணவர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 03, 2026 10:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 283 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனார்கள்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 103 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 63 தனியார் பள்ளிகள் என, 175 பள்ளி களை சேர்ந்த, 9,359 மாணவர், 9,845 மாணவியர் என, 19,204 மாணவர்கள் இன்று தேர்வெழுத இருந்தனர். இதில், 84 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுக்கு, 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இறுதி நேர பதற்றத்தை தவிர்க்க, மாணவர்கள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என தேர்வு மைய அலுவலர்கள் அறிவுறுத்தி இருந்தனர். தேர்வு மையங்களில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். தேர்வு காலை, 10:00 மணிக்கு தொடங்கியது. நேற்று நடந்த தமிழ் பாட தேர்வில், 283 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us