ADDED : செப் 27, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி அடுத்துள்ள பட்டர்பிளை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்-போது, அவ்வழியாக வந்த குஜராத் மாநில பதிவெண் கொண்ட மஹிந்திரா தார் ஜீப்பை நிறுத்தினர். அதிலிருந்த டிரைவர் ஜீப்பை நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார். வாகனத்தை சோதனை செய்-ததில், 40 மூட்டைகளில், 292 கிலோ எடைகொண்ட, 1.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை பறிமுதல் செய்தனர்.
