ADDED : செப் 27, 2026 03:29 AM

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் தலை-மையில் சுகாதார ஆய்வாளர் மணி, இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஒன்றிணைந்து, 18 வார்டுகளிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளும், மருந்து தெளித்தல், புகையடிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொண்-டனர்.
பொதுமக்களுக்கு டெங்கு பரவலை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தினமும் குடிநீரை நன்றாக காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும். வாரத்திற்கு இருமுறை தண்ணீர் பிடித்து வைக்கும் தொட்டிகள் மற் றும் ட்ரம்களை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுற்றிலும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்-டைகள் போன்ற நீர் தேங்கக்கூடிய பொருட்களை கண்ட இடங்-களில் துாக்கி எறியாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு இல்லா கிராமங்களை உருவாக்க, பொது-மக்கள் அனைவரும் சுகாதாரத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டு கொள்ளப்பட்டனர்.
