/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்
/
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்
ADDED : அக் 25, 2024 01:03 AM
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்
தர்மபுரி, அக். 25-
தர்மபுரி அடுத்த, பாரதிபுரத்தில், தர்மபுரி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், தர்மபுரி நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் பகுதி - 2 திட்ட மதிப்பீடு தயாரிக்கபட்டு, 82.15 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதற்காக நடந்த விழாவில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு ஆகியோர், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, ஆட்டுகாரம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண், விற்பனை மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு, 8.39 லட்சம் ரூபாய் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினர்.
பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசுகையில், ''புளி ஏற்றுமதியாளர்களுக்கு மானியம், புளி உற்பத்தி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தர்மபுரியில் தொடங்கப்படவுள்ள சிப்காட்டில், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
இதில், தர்மபுரி கலெக்டர் சாந்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.